அகபல்கோ டி யுவாரெசு, பொதுவாக அகபல்கோ, மெக்சிக்கோவின் அமைதிப் பெருங்கடலோரத்தில…அகபல்கோ டி யுவாரெசு, பொதுவாக அகபல்கோ, மெக்சிக்கோவின் அமைதிப் பெருங்கடலோரத்தில் குயிர்ரெரோ மாநிலத்தில் அமைந்துள்ள ஓர் நகராட்சியும் முதன்மைத் துறைமுகமும் ஆகும். இந்த நகரம் மெக்சிக்கோ நகரத்திலிருந்து தென்மேற்கே 380 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது. ஆழமான, அரைவட்டமாக அமைந்த விரிகுடாப் பகுதியில் அமைந்துள்ளதால் அகபல்கோ ஓர் இயற்கைத் துறைமுகமாக மெக்சிக்கோவின் துவக்க குடிமைப்படுத்தல் காலத்திலிருந்தே இருந்து வந்துள்ளது. பனாமாவிலிருந்து ஐக்கிய அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ செல்லும் கப்பல்கள் இங்கு வந்து செல்கின்றன. மாநிலத்தின் தலைநகரான சில்பான்சிங்கோவை விட பெரிய நகரமாக அகபல்கோ விளங்குகின்றது. தவிரவும் இது மெக்சிக்கோவின் மிகப்பெரும் கடற்கரையாகவும் சுகவாசத்தலமாகவும் விளங்குகின்றது.